• Download mobile app
07 Jan 2026, WednesdayEdition - 3619
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதிசார்பற்ற அரசியல்: சசிகலாவுக்கு திருமாவளவன் பாராட்டு

December 31, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் சாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என்று அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா கூறியதை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற சசிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிகுமார் ஆகியோர் போயஸ்தோட்ட இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தனர்.
அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திருமாவளவன் பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண்ணுரிமைக்கான இயக்கம் என்பதால் அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஜெயலலிதாவிற்கு பிறகு துணிந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதை வரவேற்கின்றோம்.

பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தில் சாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என சசிகலா உறுதி அளித்ததை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க