January 12, 2021
தண்டோரா குழு
Superfan-ன் Super-Q சீலிங் ஃபேன் அதனது உயரிய சாதனைக்காக 30th National Energy Conservation Awards (2020) -க்காக சீலிங் ஃபேன் பிரிவில் ‘Appliance of the year’ விருதின் வெற்றியாளராக Bureau of Energy Efficiency (BEE) அமைப்பால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் ஆற்றல் சேமிப்பை முன்னிட்டு அதன் முன்மாதிரியான முயற்சிகளைப் பாராட்டும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆற்றல் திறனை மேம்படுத்துதல் மற்றும் அதை ஊக்குவித்துப் பரவலாக்குதல் அடிப்படையில் தொழில் தரத்தை உயர்த்துவதற்கான Superfan-ன் தொடர் முயற்சிகளை இது உறுதிப்படுத்துகிறது.
2012 ஆம் ஆண்டில், Superfan செயலற்றிருந்த இந்திய சீலிங் ஃபேன் தொழிற்துறையை தங்கள் சூப்பர் ஆற்றல் திறன் வாய்ந்த சீலிங் ஃபேன்களால் ஒரேயடியாக அசைத்தது. இந்த ஃபேன்கள் தங்களது காப்புரிமை பெற்ற Brush-Less Direct Current (BLDC) மோட்டார் வடிவமைப்பின் மூலம் இயங்குபவை. இவை வழக்கமான ஃபேன்களுடன் ஒப்பிடும்போது பாதிக்கும் குறைவான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் அதே அளவு காற்றை வழங்குபவை. Superfan சீலிங் ஃபேன், 2013 ஆம் ஆண்டில் India Innovation Initiative (i3) விருதை வென்றது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் தேசிய மற்றும் உலக அளவில் தொடர்ந்து அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றது.
இந்த சூப்பர் ஆற்றல் திறன்மிக்க ஃபேன்கள் இப்போது சந்தையில் BLDC ஃபேன்கள் என பிரபலமாக அறியப்படுகின்றன. ஒரு புதுமையான தயாரிப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், சீலிங் ஃபேன்களுக்கான கடுமையான அரசாங்க ஆற்றல் செயல்திறன் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதிலும், இந்த ஃபேன்கள் இந்திய சந்தையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை பிரபலமான பிராண்டுகளுக்குத் தெரியவைப்பதிலும் Superfan பெரும் பங்கு வகித்தது. பின்னர், கடுமையான அரசாங்க விதிமுறைகள், சந்தையில் பிரபலமான பிராண்டுகளை, இந்த தொழில்நுட்பத்தைத் தழுவி, 2020 க்குள் தங்கள் சொந்த மாடல்களைக் கொண்டுவர நிர்பந்தித்தன.
இப்போது 2021 ஆம் ஆண்டில், அலுமினியம் ப்ளேடுகள் உபயோகிப்பதால் ஏற்படும் குறைபாடுகளைக் களைய, Superfan தனது புதுமையான அணுகு முறையைக் கொண்டு ஃபேன் ப்ளேடுகளில், தொழில்துறை தரத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. சாதாரண அலுமினிய சீலிங் ஃபேன் ப்ளேடுகள் சீரற்ற காற்றோட்டத்தையே உருவாக்குகின்றன. ஆக, நாம் விரும்பும் வகையிலான சொகுசை வழங்குக்கூடிய காற்றோட்டத்தை உருவாக்க, மோட்டாரானது ப்ளேடுகளை மிக வேகமாகச் சுழற்ற வேண்டியிருக்கிறது. இவ்வேகமான சுழற்சியால் ஆரோக்கியமற்ற அதிவேகக் காற்று, அதிக இரைச்சல் மற்றும் திறனற்றதன்மை ஆகியவையை ஏற்படுகின்றன. இந்த அதிவேக ஃபேன்களின் கீழ் நீண்ட நேரம் இருந்தால் நாசி வறட்சி, தசை விறைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும் என்று அறியப்படுகிறது.
Super-Q Series ஆனது, புதுமையான Q-Flow தொழில்நுட்பத்தை அதன் அலுமினிய பிளேடுகளின் வடிவத்தில் பயன்படுத்துகிறது. இது, பிளேடுகளின் நீளத்தின் மூலம் சீரான laminar காற்றோட்டத்தை வழங்குகிறது. அதிகரித்த laminar ஓட்டம் குறைந்த வேகத்திலேயே (RPM) அதிக அளவு காற்றோட்டத்தை உருவாக்குகிறது. இந்த வகையான செயல்பாடானது, குறிப்பிடத்தக்க வகையில் ஃபேனின் சப்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடல்நல அசௌகரியங்களை அகற்றி ஆரோக்கியமான காற்றோட்டத்தை உருவாக்குகிறது.
கூடுதலாக, பிளேடுகளின் வடிவம் topological continuity அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,அதாவது ப்ளேடுகளின் நீளம் வெவ்வேறு விசிறி அளவுகளுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டாலும் கூட ப்ளேடுகளின் செயல்திறன் ஒரே அளவில் பராமரிக்கப்படுகிறது. Super-Q என்பது 24 அங்குலங்கள் முதல் 60 அங்குலங்கள் வரையிலான நிர்ணயிக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட ஃபேன்களின் தொகுப்பு ஆகும். ஒரு வீட்டிலுள்ள பல்வேறு அளவுகளுள்ள அறைகளிலும் ஃபேன்களின் செயல்திறனில் எந்த இழப்பும் இல்லாமல் பயன்படுத்தமுடியும்.
Superfan-ன் BLDC மோட்டாருடன் Q-Flow தொழில்நுட்பத்துடன் கூடிய பிளேடுகளும் இணைந்து, ஒரு 48 இன்ச் (1200 மி.மீ) அளவுள்ள ஃபேன் ஆனது, 35 வாட்ஸ் மின்சாரத்தில் 260CMM காற்றை உற்பத்தி செய்கிறது, இது மற்ற எந்த 5 Star மதிப்பீடு கொண்ட ஃபேன்களையும் விட 20% அதிக காற்றோட்டமாகும்.
சீலிங் ஃபேன் துறையில் Superfan தனது தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளின் காரணமாக ஒரு தொழில்நுட்ப முன்னோடியாக கருதப்படுகிறது Superfan குழுவினர் ஏற்கனவே தங்கள் அடுத்தகட்ட தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகின்றனர், இது காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் ’அறை குளிரூட்டுதல் சிக்கல்’-களைத் தீர்க்க இந்தியாவுக்கு உதவும்.
புதிய Super-Q-வை முன்பதிவு செய்ய +91 94980 57700 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது https://www.superfan.in/