• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சஹோதயா இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டியில் கேம்போர்டு பள்ளி சாதனை

September 11, 2025 தண்டோரா குழு

7A சைட் இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டி, பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு கால்பந்து போட்டியாகும்.இதில் ஒவ்வொரு அணியிலும் ஏழு வீரர்கள் விளையாடுவார்கள்.

இந்நிலையில் 9வது சஹோதயா 7A சைட் இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டி கோயம்புத்தூர் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் உள்ள டர்ஃப் மைதானத்தில் நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான U-14, U-17 மற்றும் U-19 பிரிவுகளின் கீழ் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகளும் 400 மாணாக்கர்களும் பங்கேற்றனர்.

இதில் மாணவிகளுக்கான பிரிவில் U-19 வெற்றியாளர் தி கேம் போர்டு இன்டர்நேஷனல் பள்ளியும், ரன்னரில் விவேகானந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளியும் இடம் பெற்றது.

மாணவர்கள் பிரிவின் கீழ், U-19 வெற்றியாளர் தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியும்,ரன்னர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியும் இடம் பெற்றது. இதேபோல U-17 வெற்றியாளராக யுவ பாரதி பப்ளிக் பள்ளியும், ரன்னர் தி கேம்போர்டு சர்வதேச பள்ளியும் இடம் பெற்றது. U-14 வெற்றியாளராக யுவ பாரதி பப்ளிக் பள்ளியும்,ரன்னர் சாகர் இன்டர்நேஷனல் பள்ளியும் வென்றன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை தி கேம்போர்டு சர்வதேச பள்ளி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சாதனை மாணவ, மாணவிகளை கேம்போர்டு பள்ளித் தலைவர் அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் பூனம் சயால் ஆகியோர் வாழ்த்தினர்.இந்த பாராட்டின் ஒரு பகுதியில் 7A சைடு இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்திய கேம்போர்டியன்களை மனதார வாழ்த்துகிறோம் எனவும் தெரிவிக்கப் பட்டது.

மேலும் படிக்க