June 9, 2018
தண்டோரா குழு
சவுதி அரேபியாவில் பெண் மாடல்களுக்கு பதிலாக டிரோன்களை பயன்படுத்தி பேஷன் ஷோ நடைபெற்றது.
சவுதி அரேபியாவில் இளவரசராக முகம்மது பின் சல்மான் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் பல அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பும் பெண்களுக்கென வாகன ஓட்டுரிமை வழங்கினார், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரத்தில் பேஷன் ஷோ நடத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் பேஷன் ஷோவில் புதிய ஆடைகளை அணிந்து பெண்கள் நடந்து வரக்கூடாது என அரசு தடைபோட்டது. பெண்கள் ஆடைகளை அணிந்து ஓய்யாரமாக நடந்து வருவது தானே பேஷன் ஷோ என அது இல்லாமல் எப்படி பேஷன் ஷோ நடைபெறும் என குழப்பதில் இருந்தனர்.
அப்போது வித்தியாசமான முயற்சியாக பெண்களின் ஆடைகளை டிரான் மூலமாக காற்றில் பறக்கவிட்டு விற்பனை செய்தனர். இந்த டிரான் மூலம் ஆடைகள் பறக்கவிட்டதால் மக்களிடையே சிறு பயம் இருந்தாலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடி இருந்த மக்கள் அதனை பார்த்து ரசித்தும் ஆடைகளை வாங்கிக்கொண்டும் சென்றனர்.