• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்

December 11, 2017 தண்டோரா குழு

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திரைப்படங்கள் திரையிட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி மன்னராக அண்மையில் பொறுப்பேற்ற முகமது சல்மான் பழைய கட்டுப்பாடுகள் பலவற்றைத் தளர்த்தி வருகிறார். அந்த வகையில், திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து கடந்த 1980ஆம் ஆண்டு சவுதியில் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சவுதியில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

சவுதியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்வாட் அலாவட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், நாட்டில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாட் அலாவட்,

“சவுதியில் முதல் சினிமா தியேட்டர் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும்.பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் படிக்க