August 28, 2018
தண்டோரா குழு
சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய முக ஸ்டாலின்,இந்தியா முழுவதும் காவி அடிக்க துடிக்கும் மோடி அரசை விரட்ட வா என்றும் தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பது தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில்,சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என தெரிவித்துள்ளார்.
அப்போது பாஜக தொண்டர் ஒருவர்,ஜீ தொண்டர்கள் நாங்க தெளிவா இருக்கோம், நீங்கள் முன் நின்று எங்களை வழி நடத்துங்கள், நாம் பயணிப்போம்ஹெச்.ராஜாவின் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளார். அதற்கு நான் தயாராகவே உள்ளேன். காவிகளின் சக்தியை காட்ட 2.9.18 வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வாருங்கள் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.