• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவர தொழிலாளி படுகொலைக்கு நீதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீரத்தியாகி விஸ்வதாஸ் தொழிலாளர் கட்சியினர் மனு

October 6, 2021 தண்டோரா குழு

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முடி திருத்திய சவர தொழிலாளி படுகொலை நீதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீரத்தியாகி விஸ்வதாஸ் தொழிலாளர் கட்சியினர் மனு அளித்தனர்.

சேலத்தில் சவரத்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தகுந்த நீதி வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரத்தியாகி விஸ்வநாதஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பாக மனு வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் வழங்கப்பட்ட மனுவில்,சேலம் மாவட்டம் வீரப்பன் ஊர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி,செல்லம்மாள் தம்பதியரின் மகனான முத்துவேல் என்பவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததாகவும்,இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முடி திருத்தியதாக கூறி அவரை அடித்து படுகொலை செய்யப்பட்டதாகவும்,எனவே படுகொலை செய்யப்பட்ட முத்துவேல் குடும்பத்தினருக்கும் தகுந்த நீதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு வழங்கிய போது மாநில மனித உரிமை பிரிவு கழகதலைவர் மணிவண்ணன்,மாநில இணைச்செயலாளர் மகேஸ்வரன், கோவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ்,அமைப்பாளர் ராமகிருஷ்ணன்,தொண்டர் அணி தலைவர் ராஜேந்திரன்,பிரதிநிதி கருப்புசாமி,இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் குமார், துணை அமைப்பாளர் மில்லர் மதன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க