April 6, 2018
தண்டோரா குழு
என் நண்பர் சல்மான் கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பாக்.முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இது குறித்து சோயிப் அக்தர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“என் நண்பர் சல்மான் கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.ஆனால், சட்டம் அதன் போக்கில் செல்கிறது. மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் ஆனால் நான் இந்த தண்டனை கடுமையானது என்று நினைக்கிறேன்.ஆனால்,என் இதயம் அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு செல்கிறது.அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என கூறி உள்ளார்.