April 7, 2018
தண்டோரா குழு
சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மான்கள் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்கி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது.வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.