• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச ரேஸிங் தளத்தில் தடம் பதித்த முதல் இந்தியப்பெண் !

November 25, 2019 தண்டோரா குழு

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்கை என ஓடிக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் பாட்டு மற்றும் மோட்டார் வாகன பந்தயம் ஆகியவற்றில் கொடிகட்டிப் பறக்கிறார் கோவையைச் சேர்ந்த மாணவி ஷ்ரவந்திகா.C.S.அகாடமியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவர் தனது ஐந்தாம் வயதிலிருந்து பாடி வருகிறார். பிரபல பின்னணி பாடகரான உன்னி கிருஷ்ணனிடம் பயிற்சி பெற்றுள்ள ஷ்ராவந்திகா கச்சேரிகள், விழாக்கள் ஆகியவற்றில் பாடி அசத்தியுள்ளார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியுள்ளார்.

இத்துடன் நிறுத்திவிடாமல் தனக்குள் இருக்கும் மற்றொரு திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக 2௦18ம் ஆண்டு முதல் கோ கார்ட் ரேசிங் எனப்படும் மோட்டார் வாகனப் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார். படிப்பு, பாட்டு, ரேசிங் என பல துறைகளில் தடம் பதித்துள்ள இவர் இத்தாலி நாட்டில் நடக்கும் FIA World Motorsport Games இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார். மோட்டார் ரேசிங்கில் முதன்முறையாக சர்வதேச அளவில் நடக்கும் இப்போட்டியானது ஒலிம்பிக்ஸ் போன்ற முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளும் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமிதத்தோடு நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்திய உள்பட 29 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில், ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என ஓர்அணியாகக் கலந்துகொள்வர்.

இது குறித்து ஷ்ரவந்திகா கூறுகையில்,

சிறுவயத்தில் எனது அப்பாவுடன் ரேஸ் நடக்கும் இடங்களுக்குச்செல்வேன்.அதிலிருந்து எனக்கு இந்த விளையாட்டில்ன் மீது ஆர்வம் அதிகமாகி விட்டது. 2௦17ம் ஆண்டு ரேஸிங்கில் எனது முதல் பயிற்சியை மேற்கொண்டேன். எம் ஸ்போர்ட் அணியின் நிறுவனரான அக்பர் இப்ராகிம் என்பவர் தான் என்பது பயிற்சியாளர். அவரின் பயிற்சியாலும் ஊக்கத்தாலும் 2௦18ம் ஆண்டு முதல் முறையாக பந்தயத்தில் கலந்து கொண்டேன். அதில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் வெற்றிகரமாக முடித்தேன். அதைபோல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழாவது இடமும், 2019ல் ஐந்தாம் இடமும்,sodi கார்ட் சாம்பியன்ஷிப்பில் ஆண், பெண் இருதரப்பினரும் பங்கேற்கும் பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்றேன். மேலும் லேடீஸ் ஓபன் கிளாஸ் என்ற பிரிவில் இரண்டாம் இடம் பெற்றேன்.

ஒரு முறை ரேஸ் ஓட்டிக்கொண்டு இருக்கையில் சக போட்டியாளர் மோதியதில் சிறு விபத்து ஏற்பட்ட போதும் கூட நான் மனம் தளராது முழுமையாக நிறைவு செய்தேன். சர்வதேச அளவில் நடக்கும் கார்ட் ரேஸில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.
பார்பதற்கு சாதாரண விளையாட்டு போல் தெரிந்தாலும் மற்ற கார்கள் மாதிரி இல்லாமல் அதிவேகத்தில் ஓட்டக்கொடிய ரேஸ் கார்களை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. சிறுவயதில் இது போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் இவருக்கு தன் பெற்றோர்கள் முழு ஆதரவு அளிக்கின்றனர். எந்த துறையாக இருப்பினும் அதில் நூறு சதவிகிதம் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் இவர் இளைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மேலும் படிக்க