June 26, 2018
தண்டோரா குழு
கோவையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சர்வதேச போதை ஒழிப்பு தினம் ஆண்டும் தோறும் ஜீன் 26 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்நாளில் போதை பொருள் குறித்தும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாபாளையத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
எல்லை பாதுகாப்பு படை வளாகத்தில் துவங்கிய பேரணியை துணை கமாண்டர் கெளரவ் சர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது எல்லை பாதுகாப்பு வளாகத்தில் இருந்து கிட்டாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வரை சென்றது.ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதையால் ஏற்படும் பாதுப்புகள் குறித்த விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.பேரணியில் 50 க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.