• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச பள்ளிகளுக்கான கேம்பிரிட்ஜ் கணித தேர்வில் உலக அளவில் சாதனை படைத்த கோவை சி.எஸ். அகாடமி பள்ளி மாணவர்கள்

January 31, 2025 தண்டோரா குழு

கோவையில் உள்ள சி.எஸ். அகாடமியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும் பிரணவ் இளங்கோ ஆகியோர் 2023-24 ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வு தேர்வில் உலகளவில் சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை பாராட்டவும், இந்த சாதனை குறித்த செய்தியாளர் சந்திப்பும் வெள்ளிக்கிழமை (31.1.25) அன்று திருச்சி சாலையில் உள்ள இப்பள்ளியின் கிளையில் நடைபெற்றது.

சி.எஸ்.அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாணவி ஷிவி விக்ரம் சர்வதேச பள்ளி பாடத்திட்டத்தில் ஏ.எஸ். என்கிற உயர் நிலையில் (நமது பாடத்திட்டத்தில் 11ம் வகுப்புக்கு இணையாக உள்ள வகுப்பு) பயில்கிறார்.அவர் 2023-24 தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார்.இந்தியாவில் வெறும் ஐந்தே மாணவர்கள் தான் உலக அளவில் கணிதத்தில் முன்னிலை பெற்றுள்ளனர். அதில் ஷிவியும் ஒருவர்.

அதே போல, ஐ.ஜி.சி.எஸ்.இ. எனும் நிலையில் (நமது பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கு இணையாக உள்ள வகுப்பு) பயிலும் மாணவர் பிரணவ் இளங்கோவும் 2023-24 தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் முன்னிலை பெற்ற வெறும் 30 பேர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த இமாலய சாதனைக்காக பாராட்டு விழா நடத்தி இரு மாணவர்களையும் வாழ்த்தி, அவர்களுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் அடைய விரும்பும் தரவரிசைகளை அடைய இந்த மாணவர்களை தயார்படுத்திய கணிதத் துறை ஆசிரியர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் பள்ளி சார்பில் கணித ஆசிரியர்களான தாசரி சைதன்யா மற்றும் மோகன பிரியா ஆகியோருக்கு அவர்களின் சிறந்த வழிகாட்டுதலுக்காக சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களை இந்த உயரத்தை அடைய பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் சோனி தாமஸ் மற்றும் முதல்வர் சாந்தப்ரியா முன்னிலையில் அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் பாராட்டி கௌரவித்தார்.

மேலும் படிக்க