• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோ 2022 – தகுதி சுற்றில் தமிழகத்தை சேர்ந்த 12 சிறுவர்கள் பங்கேற்பு

May 26, 2022 தண்டோரா குழு

சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் வெற்றி சிறுவன் ராணா சிவக்குமார் பயிற்சி மூலம் உலக அளவில் நடைபெற உள்ள சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோ 2022-ல் தகுதி சுற்றில் வெற்றி பெற தமிழகத்தை சேர்ந்த 12 சிறுவர், சிறுமியர் மாடல்களுக்கு தயாராகியுள்ளனர்.

துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த சிறுவன் ராணா சிவக்குமார் வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான சிறந்த பேஷன் மாடல் சிறுவன் எனும் பெருமையை பெற்றுள்ளார். இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ராணா சிவக்குமார் ஈர்த்துள்ள நிலையில் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள உள்ள சுமார் 12 போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் ராணா மற்றும் அவரது தந்தையும் சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் தமிழக இயக்குனருமான சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் இதற்கான பயிற்சி வகுப்பு பேஷன் ஷோவில் கலந்து கொள்ள உள்ள கோவையை சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள் அசத்தலாக நடை போட்டு அசத்தினர்.

இது குறித்து சர்வதேச ஜூனியர் ஷோ வின்னர் ராணா மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 58 ஜூனியர் மாடல்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், கேரளாவில் உள்ள குமாரகம் பகுதியில் தேசிய அளவில் நடைபெறும் உள்ள போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அளவில் சர்வதேச ஜூனியர் பேஷன் ஷோவில் கலந்து கொள்ள இதுவரை இல்லாத அளவில் சுமார் 12 சிறுவர், சிறுமியர் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்க