• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் சைகை மொழி குறித்த பயிற்சி

September 23, 2019

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கென சர்வதேச சைகை மொழி தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இதில் மாணவ மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

சைகை மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதவரான பேராசிரியர் லிபின் சைகை மொழியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

பின்னர் சைகை மொழியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

காது மற்றும் வாய்பேச முடியாதோர் நம்மில் சரி விகித அளவில் பயணிப்பதாகவும்,எனவே இவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இந்த சைகை மொழி குறித்த விழிப்புணர்வை அனைவரும் அறியும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சைகை மொழி ஆசிரியர் முத்து ரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க