• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்து அஜித்தின் தக்‌ஷா குழு சாதனை !

September 29, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமா துறையை தாண்டி அஜித்திற்கு கார் பந்தயம், ஏரோமாடலிங் மீதும் ஆர்வம்அதிகம். இதனால் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியின் தக்‌ஷா என்ற மாணவர் குழுவுக்கு ஆலோசகராக இருக்க நடிகர் அஜித்குமாரை கல்லூரி நிர்வாகம்கேட்டுக்கொண்டது. இதற்கு அஜித்தும்ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இக்குழுவுக்கு அஜித் அலோசகராக இருந்தார், அந்த குழு இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறவுள்ள ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ என்ற போட்டிக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும், சென்னையைச் சேர்ந்த தக்‌ஷா குழு தேர்வு செய்யபட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. ஒரு மருத்துவமனையிலிருந்து 30 கி.மீ தொலைவு வரை இருக்கும் இடங்களுக்குச் சென்று நோயாளிகளின் ரத்த மாதிரியைக் கொண்டு வரும் ஆளில்லா (ட்ரோன்) விமானத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் போட்டியின் சவால்.
உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் போட்டியில் தக்‌ஷா குழு வடிவமைத்திருந்த விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஹ் யூஏஎஸ் என்ற ஆளில்லா விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

விமானத்தின் பறக்கும் திறனைப் பொறுத்தவரை தக்‌ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மோனாஹ் விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றுள்ளது. தக்‌ஷா குழு சற்று குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் 116.55 புள்ளிகளுடன் மோனாஹ் விமானம் முதலிடத்தையும், 115.70 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. படப்பிடிப்பின் காரணமாக நடிகர் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க