June 7, 2018
தண்டோரா குழு
சர்வதேச அளவிலான குதிரையேற்ற போட்டியில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து கோவை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள் குதிரையேற்ற பயிற்சி பெற்று வருகின்றனர்.சிறு வயதிலேயே குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்ததன் காரணமாக சொந்தமாகவே குதிரையை வாங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பிறகு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று உள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் இந்த மூன்று மாணவர்களும் பங்குபெற்று ஆறு,ஏழாம் இடம் என சர்வதேச வீரர்களை பின்னுக்கு தள்ளி டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.