February 14, 2020
கோவை அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய அரசு தமிழ்நாடு கீழ் கொண்டு வர கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது அந்த கல்லூரியானது ஜவுளி துறையின் கீழ் செயல்பட்டு வருதாகவும் அதனால் கல்வி கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே போவதாகவும், அடிப்படை வசதிகளான விளையாட்டு மைதான கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருபதாகவும் கூறி எனவே இதை மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் (CUTN) கீழ் கொண்டுவர கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு கொண்டு வந்தால் கல்வி கட்டணங்கள் குறையும் அடிபடை வசதிகள் அனைத்து தங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.இதற்கு தீர்வு காண காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் யாரும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே வராதவாறு கல்லூரி வளாக கதவுகளை மூடியதால் அனைவரும் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.