February 11, 2022
தண்டோரா குழு
கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பறக்கும்படை குழுவினர் வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்துநிறுத்தி சோதனை நடத்தியபோது பைக்கில் ரூ.65 ஆயிரத்து 900 இருந்தது. ஆனால், பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோவை ரேஸ்கோர்சில் உள்ள சார்பு கருவூலஅலுவலருக்கு தகவல் தெரிவித்து, உதவி கருவூல அலுவலரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.