• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்

July 18, 2019 தண்டோரா குழு

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்(72) சென்னையில் இன்று காலமானார்.

ஜீவஜோதியின்கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணையில், ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் சரண் அடையவும் ராஜகோபாலுக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, கடந்த 9ஆம் தேதி அன்று செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஆம்புலன்சில் வந்து அவர் சரண் அடைந்தார்.

அப்போது அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ராஜகோபாலின் உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கே மருத்துவ வசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார். இதைஅடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தனர். செவ்வாய் கிழமை இரவு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜகோபாலுக்கு, ஐ.சி.யூ.வில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் படிக்க