• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சயன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

June 7, 2017 தண்டோரா குழு

கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 11 பேர் கொண்ட கும்பல் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஆத்தூர் அருகே ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு அன்று விபத்தில் உயிரிழந்தார். இதற்கு அடுத்தநாள் அதிகாலையில் கனகராஜின் நெருங்கிய நண்பரும், இவ்வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியுமான சயான் திருச்சூர் பைபாஸ் சாலையில் கண்ணாடி என்கிற இடத்தில் கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதில் இவரது மனைவி மற்றும் குழந்தை விபத்தில் பலியாயினர்.

இதில் படுகாயம் அடைந்த சயனுக்கு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சயானை குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் நேற்று அழைத்து சென்றனர்.இதையடுத்து, கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றம் சயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சயனுக்கு மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

மேலும் படிக்க