• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து விவகாரம் -இரண்டு வாலிபர்கள் விடுவிப்பு

June 10, 2023 தண்டோரா குழு

வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கோவை கரும்புக்கடை பாரத் நகரை சேர்ந்த சுலைமான் (வயது 27), மற்றும் சபா கார்டனை சேர்ந்த அப்துல் காதர் (27) ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ம் தேதி சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கரும்புக்கடை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப், மற்றும் சில புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் இருவரிடமும் டெல்லி, தூத்துக்குடி,ஆந்திரா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தொழில் சம்பந்தமாக சென்று வந்த ஆவணங்களை காண்பித்தனர். இதையடுத்து 2 நாட்கள் விசாரணைக்கு பின் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

மேலும் படிக்க