• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக முன்னேற்றத்திற்கு உதவும் நீடித்து பயனளிக்கும் முயற்சிகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் எடுத்துரைத்தது

December 27, 2022 தண்டோரா குழு

பிரிசிஷன் மெஷினிங் மற்றும் அசெம்ப்ளி இண்டஸ்ட்ரி ஆகியதுறைகளில் இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழும் டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் சமூக முன்னேற்றத்திற்கு நீடித்து பயனளிக்கும் வகையில் தான் மேற் கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்தது.

மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்திருக்கிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் இந்நிறுவனம் தமிழ்நாட்டின் மீது கொண்டிருக்கும் அக்கறையையும், சமூகநலன் மீதுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஆலையை நிறுவிய இரண்டு ஆண்டுகளுக்குள், நிறுவனம் உள்ளூர் மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் நல்ல விதமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கல்வி, விவசாயம் மற்றும் பெண்கள் தாமாக முன்னேற்றம் காண அவசியமான வாய்ப்புகள், வசதிகளை உருவாக்கி கொடுத்தல் என சமூகத்திற்கு நீடித்து பலனளிக்கும் வகையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்.பி க்டர் ஏ.செல்லக்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.பி. முனிசாமி ,டி. ராமச்சந்திரன் , ஒய்.பிரகாஷ், கே. அசோக்குமார், டி.எம். தமிழ்ச்செல்வம் , டி.மதியழகன் , ஓசூர் மேயர் சத்தியா, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமூகத்திற்கு நீடித்து பயனளிக்கும் வகையில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திகழும் டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாட்டை சேர்ந்த ஏர்முனை விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புடன் இணைந்து, தனது நிறுவனத்திற்குள் பயன்படுத்துவதற்கு தேவையான காய்கறிகளை கொள்முதல் செய்துவருகிறது.

மேலும், ‘அனைத்து மகளிர் பால் கூட்டுறவு நிறுவனத்தையும் அமைத்துள்ளது, இந்த முயற்சிகளின் மூலம் இப்பகுதிகளில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகளுடன் கூடுதலாக, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, உள்ளூரை சேர்ந்த இளைஞர்களின் திறமைகளை மீண்டும் வளர்த்தெடுப்பதன் மூலம் அவர்களது வாழ்வை மேம்படுத்த ஆதரவுக்கரம் நீட்டுகிறது.

இந்த நிகழ்வில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் செய்தித் தொடர்பாளர்

“எங்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த, உணர்வுபூர்வமான இரண்டு வருட பயணமாகும், மேலும்ச மூகமேம்பாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் தமிழக அரசு மற்றும் மக்களுக்கு நாங்கள் பெருமளவில் கடமைப்பட்டுள்ளோம். டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களையும் பிரதிநிதிக்கும் வகையில் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக, தமிழ்நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்களான பாரதியார் பல்கலைக்கழகம், விஐடி வேலூர் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என இந்த மூன்று பல்கலைகழங்களுடன் இணைந்து தரமான உயர்கல்வி திட்டங்களை உருவாக்கியுள்ளது. தனது மேலான ஊழியர்களுக்காக போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிடங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான பராமரிப்பு அமைப்பை சிறப்பாக செயல்படுத்த முதலீடு செய்துள்ளது மற்றும் எதிர்காலத்திற்காக கனெக்டட் டவுன்ஷிப் எனப்படும் அனைத்து அம்சங்களிலும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இணைக்கப்பட்ட நகரத்தை உருவாக்குவதற்கு அக்கறையுடன் பணியாற்றிவருகிறது.

மேலும் படிக்க