• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக சேவையில் அசத்தும் கோவையை சேர்த்த இளம்பெண் !

September 12, 2023 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த இளம்பெண் ஸ்ருதி (26),இவர் Kosha (கோஷா) எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் இவர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுகிறாள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்து அதை எவ்வாறு அடையலாம் என வழிகாட்டி வருகிறார்.

இதில் மருத்துவம், பொறியியல், ஊடகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல்வேறு துறைகளைப் பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறார்.இதுமட்டுமின்றி, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த படிப்பை எவ்வாறு குறைந்த செலவில் படிக்கலாம்? அதற்கு எவ்வாறு தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பல்வேறு துறையில் பணியாற்றும் தொழில் வல்லுநர்களைக்கொண்டு இலவசமாகப் பயிற்சி அளித்தும் வருகிறார்.

இந்த இலவச பயிற்சி மூலம் இதுவரை சுமார் 179 மாணவர்கள் பலன் அடைந்து உள்ளனர். மேலும் 8 மாணவர்கள்(19 வயது) +2 முடித்தவுடன் இவர்கள் வழிகாட்டுதலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறனை மேம்படுத்தி தற்போது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் மாணவர்களுக்கு தலைமைப்பண்பு (leadership),இலக்கு நிர்ணயம் (goal-setting) என பல்வேறு திறன் மேம்பாடு பயிற்சியளித்து வருகிறார்.போதை மறுவாழ்வு இயக்கம் மூலம் இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்களுக்கு பல்வேறு போதை மறுவாழ்வு ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் இலவச மறுவாழ்வை அழித்து வருகிறார்.

இது மட்டுமின்றி, பசியில்லா கோவை எனும் நோக்கத்தில், கோவை மக்களிடையே, “உணவு தானம் ஓர் மகத்துவம்” எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் கோவை மக்கள் தினம் ரூ.1 முதல் அவர்களுக்கு முடிந்த தொகையைச் சேமித்து Kosha – பசியில்லா கோவை இயக்கம் மூலம் அவரவர் வாழ்நாளில் முக்கியமான நாளன்று 10ரூபாய்க்கு ஒரு நபர் எனக் கணக்கில் உணவு தானம் செய்ய உற்சாகப்படுத்தி வருகிறார்.இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 15000 தெருவோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,

“படிப்பு ஒன்றே ஒருவர் வாழ்வில் மிகமுக்கியமான ஒன்று, நமது சமூகத்தில் அனைத்து மாணவர்களிடமும் ஆற்றல் மற்றும் திறமை உள்ளது. அதைச் சரியான நேரத்தில், சரியான முறையில் வழிகாட்டினால் நம் தேசம் உலகம் முழுவதும் போற்றும் தேசமாக மாறிவிடும். அதற்கான சிறிய முயற்சிதான் இது.” எனக் கூறினார்.

மேலும் படிக்க