May 25, 2018
தண்டோரா குழு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடித்தது உதவி பாகனை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே கஜேந்திரன் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை என்பதால் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று கூட்டம் அதிக அளவில் இருந்தது.இந்நிலையில் கோவில் யானை மசினிக்கு திடீரென மதம் பிடித்து தாக்க துவங்கியதில் கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர் காயமடைந்துள்ளனர்.யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.இதையடுத்து யானை சமாதானப்படுத்த முயன்ற பாகன் கஜேந்திரனை யானை மிதித்து கொன்றது.பாகனையே யானை கொன்று விட்டதால், அதனை அடக்க ஆளில்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே யானை தாக்கி பாகன் பலியானதை அடுத்து சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டது.இதையடுத்து யானையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.