• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட அந்தமான் வாலிபரை கைது

February 13, 2020

காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட அந்தமான் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காந்திபுரம் காவல் நிலையத்தி்ல் மகேந்திரன் என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இதனிடையே காவல் நிலையத்தின் உள்ளே நேற்று மாலை பணியிலிருந்த மகேந்திரன் வழக்கு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதனையடுத்து அந்த வாலிபரை கண்டித்த காவலர்கள் வாலிபரை வெளியே அனுப்ப முற்பட்டனர். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தமான் தீவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார் (34) என்பதும் தற்போது ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்த்து.நேற்று காந்திபுரத்தில் அருகே உள்ள டாஸ்மாஸ்க் கடையில் மது அருந்திய பெத்து குமார் குடிபோதையில் காவல் நிலையததிற்குள் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பெத்துகுமார் மீது வழக்கு பதவி செய்துள்ள போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர். இதேபோன்று கோவை கணபதி பகுதியில் குடிபோதையில் போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட ரத்தினபுரி பகுதியைச்சேர்ந்த ஜோதிமாணிக்கம் என்பவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர்.

மேலும் படிக்க