• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் கேரள பெண்கள் எதிர்த்து நிற்கிறார்கள்? சு.சாமி கேள்வி

October 6, 2018 தண்டோரா குழு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதி தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை ஏன் கேரள பெண்கள் எதிர்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையில், தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதைபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இத்தீர்ப்பினை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏன் கேரள பெண்கள் மத்தியில் இந்த எதிர்ப்பு கோஷம் எழுந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ஏன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள பெண்கள் எதிர்த்து நிற்கிறார்கள்?. இந்த தீர்ப்பில் “அந்த 5 நாட்களில்” அவர்களை கோவிலுக்கு செல்ல யாரும் தூண்டவில்லை. கோவிலுக்குள் செல்வது அவரவர் விருப்பம், கடவுள் என்ன நினைகிறார் என்பது யாருக்கு தெரியும்” என பதிவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வந்த நாள் அன்று இந்த தீர்ப்பை தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்ததாக சுப்பிரமணின் சுவாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க