• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலின் பெயரில் மாற்றம்

January 3, 2018 தண்டோரா குழு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலின் பெயரை மாற்றப்போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் நேற்று (ஜன 2) அறிவித்தார்.

ஆண்டுதோறும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திராவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, கடுமையான விரதங்களை மேற்கொண்டு, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு வந்து, ஐயப்ப சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் மொத்தம் 1248 கோவில்கள் உள்ளன. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில்தான் மிகப் பெரிய கோயில்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை “சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா” என மாற்ற உள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.2016ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் சபரிமலை கோயிலின் பெயரை “சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்” என மாற்றினார்.அதனைத்தொடர்ந்து, பம்பையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் மாற்றப்பட்டன.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் சபரிமலை கோயிலின் பெயரை மீண்டும் “சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில்” என மாற்ற முடிவு செய்துள்ளார்.

சுற்றுலாத் துறை மற்றும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன்,
உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காகத்தான் முந்தைய தேவசம் போர்டு சபரிமலை கோயிலின் பெயரை மாற்றியது.

தற்போது சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரைக் கொண்டு வர புதிய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. அந்த முடிவை நான் வரவேற்கிறேன் கோயில் தொடர்பான பத்திரங்களிலும் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்று விவகாரத்தை அரசு அதிகமாக வெளிப்படுத்த விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.இன்று (ஜன 3) திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேவசம் போர்டு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க