October 12, 2018
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் என மலையாள நடிகர் கொல்லம் துளசி ஆவேசமாக பேசியுள்ளார்.
10வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால்,உச்சநிதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகளும் முக்கியப பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. எனினும், கேரள அரசு சபரி மலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையில், கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மலையாள நடிகர் கொல்லம் துளசி,
சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களை வெட்டி ஒரு பாதியை டெல்லிக்கும் இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்நிலையில், மலையாள நடிகர் கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.