December 20, 2025
தண்டோரா குழு
பங்கு சந்தை சூழலுக்கு ஏற்ப டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் “டாடா ஏஐஏ மல்டிகேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பண்ட்” மற்றும் “டாடா ஏஐஏ மல்டிகேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பென்ஷன் பண்ட்” ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் துறை சார்ந்த மாற்றங்களால் இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இத்தகைய சூழலில், முதலீட்டாளர்கள் ரிஸ்க் மற்றும் லாபம் இரண்டையும் சமன் செய்யும் உத்திகளைக் கையாள்வது அவசியமாக உள்ளது. பல்வேறு துறைகள், சொத்துகள் மற்றும் பலதரப்பட் நிறுவனங்களில் முதலீட்டைப் பிரித்து வைப்பதன் மூலம், முதலீட்டாளர்கள் ஒரே ஒரு சந்தைப் பிரிவை மட்டும் நம்பியிருப்பதைத் தவிர்ப்பது என்பது நீண்ட கால அடிப்படையில் செல்வத்தை உருவாக்க உதவும்.
இந்தியாவின் வளர்ச்சி இன்று அனைத்துத் துறைகளிலும் விரிவடைந்துள்ளது. பாரம்பரியத் தொழில்கள் முதல் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வரை, பெரிய நிறுவனங்கள் முதல் நம்பிக்கைக்குரிய நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் வரை அனைத்தும் இதில் அடங்கும். ஒரு ‘மல்டிகேப்’ உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்கள் வளர்ச்சியின் பலனைப் பெறலாம். அதே நேரத்தில், பல்வேறு சந்தைப் பிரிவுகளில் முதலீடு செய்வதால், சந்தை ஏற்ற இறக்கங்களின் பாதிப்புகளையும் குறைக்க முடியும்.இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் “டாடா ஏஐஏ மல்டிகேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பண்ட்” மற்றும் “டாடா ஏஐஏ மல்டிகேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பென்ஷன் பண்ட்” ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.
இவை ‘நிப்டி 500’ குறியீட்டை அடிப்படையாகக் கொண்டவை. இதன் மூலம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் உங்களின் தொகை முதலீடு செய்யப்பட உள்ளது.இந்த இரண்டு பண்டுகளும் புதிய வெளியீட்டு காலமான வரும் 24-ந்தேதி முதல் இம்மாதம் 31-ந்தேதிவரை சந்தாவுக்குக் கிடைக்கும். இக்காலத்தில் ஒரு யூனிட்டின் விலை 10 ரூபாய் ஆகும். முதலீட்டாளர்கள் டாடா ஏஐஏ-வின் யூலிப் திட்டங்கள் மூலம் இவற்றில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சந்தை சார்ந்த வளர்ச்சியோடு, ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பின் பலனும் கிடைக்கும்.இந்த ‘மல்டிகேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்’ ஒரு சமச்சீரான அணுகுமுறையை வழங்குகிறது.
இது பெரிய நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையையும், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் வேகமான வளர்ச்சித் திறனையும் இணைக்கிறது. இந்த நெகிழ்வான முதலீட்டு முறை, இந்தியாவின் பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதே சமயம் ரிஸ்க்கை நிர்வகிக்கவும் உதவுகிறது.யூலிப் திட்டங்கள் மூலம் இவற்றை வழங்குவது, நுகர்வோர் ஒரே திட்டத்தில் செல்வத்தை பெருக்கவும், தங்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் டாடா ஏஐஏ வழிவகை செய்கிறது. மேலும், தற்போதைய வரி சட்டங்களின்படி இதற்கு வரிச் சலுகைகளும் கிடைக்கலாம்