மத்திய ரிசர்வ் படை போலீஸ் மீது நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
பேச்சி அடர்ந்த காடுகள், சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ளன. அந்த காட்டுப் பகுதி பேச்சி காவல் நிலைய வரம்பிற்குள்ளது. அங்கு சனிக்கிழமை (மார்ச் 11) காலை 9.15 மணியளவில், கொடசேரு கிராமத்தின் சாலையில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் 219 படை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த அவர்கள் மீது நக்ஸலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். அதில் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். ரோந்துப் பிரிவில் 112 பாதுகாப்பு படை வீரர்கள் இருந்தனர்.
“சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ் மீது நக்ஸ்லைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
“இறந்த வீரர்கள் வைத்திருந்த 1௦ ஆயுதங்கள் மற்றும் இரண்டு வயர்லஸ் ரேடியோ செட்களைக் கைப்பற்றிச் சென்றுவிட்டனர்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
“சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரத்தில் இஞ்சிராம்-பேச்சி சாலை இணைப்பு நடந்துகொண்டிருந்தது. இடையூறு இல்லாமல் அந்தப் பணி நடைபெற மத்திய ரிசர்வ் படை போலீஸ் சாலை பாதுகாப்புப் பிரிவின் 219 படை பிரிவினர் செய்யப்பட்டு வந்தனர். நக்ஸலைட்டுகள் அவர்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டனர்” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதலில் தொடர் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படை வீரர்கள் சிக்கினர். அதைத் தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்புப் படை விரைந்து, இறந்த வீரர்களில் உடல்களை மீட்டனர்.
காயமடைந்தவர்கள் விமானம் மூலம் பேச்சி நகரில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது” என்றார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்