• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா!

June 28, 2024 தண்டோரா குழு

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான ‘கர்மா -விதியை வெல்லும் சூத்திரங்கள்’சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது.புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும்,நடிகருமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட,அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். முரளி பெற்றுக் கொண்டார்.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் இன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் கலைமாமணி திரு. மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர். புத்தகம் குறித்த தெளிவான கருத்துக்களை, சுவைப்பட எடுத்துக் கூறிய அவர்களின் சிறப்புரையை இவ்விழாவில் கலந்து கொண்ட திரளான ஈஷா தன்னார்வலர்களும், பொது மக்களும் ரசித்துக் கேட்டனர்.

சத்குரு அவர்கள் இந்த புத்தகத்தின் மூலம், கர்மா என்றால் என்ன? நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரிக்கிறார். மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிகாட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.

‘கர்மா – விதியை வெல்லும் சூத்திரங்கள்’ புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.

மேலும் புத்தக வாசிப்பாளர்களால் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கிலப் புத்தகம் NEWYORK BEST SELLER லிஸ்ட்டில் இடம்பிடித்தது. அத்தோடு 25-க்கும் அதிகமான உலக மொழிகளில், இந்த புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க