• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சதுரங்க வேட்டை பட பாணியில் துணிகரம் கோவையில் இரிடியம் மோசடி கும்பல் 3 பேர் கைது

May 6, 2022 தண்டோரா குழு

சதுரங்க வேட்டை பட பாணியில் கோவை லாட்ஜில் தொழிலாளியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (60),சென்ட்ரிங் தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பு மூலம் 2 பேர் அறிமுகம் ஆனார்கள்.அவர்கள் மனோகரனிடம் எங்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள இரிடியம் உள்ளது. இதை உங்களுக்கு ரூ.30 லட்சத்துக்கு தருகிறோம் என கூறினர்.

அவர்களின் பேச்சில் மயங்கிய மனோகரன், ரூ.30 லட்சம் கொடுத்து அந்த பொருளை வாங்க ஆசைப்பட்டுள்ளார். தொடர்ந்து செல்போனில் பேசிய நபர்கள் மனோகரனை கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே வரும்படி கூறினர்.

இதனையடுத்து மனோகரன், தேனியில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி கோவை வந்து, தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அந்த நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.30 லட்சத்துடன் கோவை வந்துள்ளதாகவும், தங்கியிருக்கும் இடம் குறித்தும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் லாட்ஜூக்கு மனோகரனை பார்க்க கையில் பேக்குடன் 3 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் பேக்கை மனோகரனிடன் கொடுத்து, இதிலுள்ள பொருட்கள் சிறப்பு பூஜை செய்து வைக்கப்பட்டுள்ளது. உடனே திறந்து பார்க்க வேண்டாம். ஒரு மணி நேரம் கழித்து பாருங்கள் எனக் கூறிவிட்டு ரூ.30 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தபோது பேக்கில் ஒரு செங்கல் இருந்துள்ளது.

சதுரங்க வேட்டை பட பாணியில் இந்த மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.தீவிர விசாரணையில், மோசடியில் ஈடுபட்டத தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வேலுசாமி (27), அவரது நண்பர்கள் தேனியைச் சேர்ந்த நிர்மல் செல்வன் மற்றும் வினோத்குமார் என்பதும், இந்த மோசடி சம்பவத்திற்கு வேலுசாமி மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

ஒரே பகுதியைச் சேர்ந்த இவர்கள் மனோகரனை ஏமாற்றும் நோக்கில் கோவை வரவழைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.7.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க