February 26, 2018
தண்டோரா குழு
சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் மர்ம மரணடைந்துள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் தான் கல்லூரியில் கிருஷ்ணபிரசாத் சேர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிருஷ்ண பிரசாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சண்டிகர் விரைந்துள்ளனர்.
கிருஷ்ண பிரசாத்தின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் மர்மமாக உயிரிழப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது.