• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களை தடுத்து நிறுத்தக் கோரி இந்து முன்னணி மனு

July 22, 2019 தண்டோரா குழு

கோவை மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும் மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

மதுக்கரை அருகே உள்ள ரொட்டி கவுண்டனுர் கிராமத்தில் சட்ட விரோதமாக சர்ச் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்கு வெளியூர்களில் இருந்து வரும் கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் ஜெபம் செய்வதோடு மட்டுமல்லாமல் கிராம மக்களிடம் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் இந்து முன்னணி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் k. m. பேச்சி முத்து,

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இயங்கி வரும் சர்ச் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கட்டாய மத மாற்றம் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வின்போது இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் தன்பாலும் உடன் இருந்தார்.

மேலும் படிக்க