December 3, 2020
தண்டோரா குழு
அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில்,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி விரைவில் நானே முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.மேலும்,மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்று கூறியுள்ள அவருடைய ட்விட்டர் பதில் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என்று ரஜினி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.