• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் – ஐஜி பவானீஸ்வரி

August 9, 2023 தண்டோரா குழு

சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க எல்லைகள் வலுப்படுத்தப்படும் எனவும் புதிதாக பொறுப்பெற்றுள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐஜி பவானிஸ்வரி கோவை பந்தய சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

மேற்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நல்ல முறையில் சிறப்பாக பணி செய்து வருகிறார்கள் என்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் குழந்தைகள் மற்றும் அவர்கள் மீது நடத்தப்படும் குற்றத்தை எப்படி தடுக்கலாம் என விழிப்புணர்வு செய்து வருகிறார்கள் என்றும் பாராட்டினார்.

அதே போல போதை பொருள் புழக்கம் என்பது கண்டிப்பாக பெரிய குற்றம் என்பதால் நிச்சயமாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனை சிறப்பாக செய்ய உள்ளதாகவும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக எது நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்ததுடன் போதை பொருள் புழக்கத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் வருகிற பதினொன்றாம் தேதி ஆன்டி ட்ரக் நாள் சம்பந்தமாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிகாரிகளிடம் கலந்து பேசி போதைப்பொருள் எந்த வழிகளில் வருகிறதோ அதனை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளேன் என்றும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எல்லை பகுதிகளில் இருந்து எப்படி போதை பொருள் உள்ளே வருகின்றது என்பது குறித்து ஆய்வு செய்து அதனை தடுக்க இன்னமும் எப்படி வலுப்படுத்த முடியுமோ அதனை செய்ய உள்ளோம் என்றும் வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என பாகுபாடு பார்க்காமல் யார் குற்றம் செய்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் மேற்கு மண்டலம் அன்பான மக்கள் அவர்களுக்கு அமைதியான முறையில் நல்ல வாழ்க்கை கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

பொதுமக்களுக்கு மனுநீதி நாள் போன்றவை நடத்தப்பட்டு அதில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அவர்களுக்கு என்ன தேவையோ சட்ட ரீதியாக உறுதியாக செய்து கொடுக்கப்படும் எனவும் ஐஜி பவானீஸ்வரி கூறினார்.

மேலும் படிக்க