• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டமன்ற தேர்தலில் உரிய மரியாதை அளித்து சீட் வழங்கும் கட்சிக்கு ஆதரவு – தமிழக நாயுடு பேரவை தலைவர் அறிவிப்பு !

January 3, 2021 தண்டோரா குழு

சட்டமன்ற தேர்தலில் உரிய மரியாதை அளித்து, சீட் வழங்கும் கட்சிகளுக்கு ஆதரவு என கோவையில் நடைபெற்ற “தமிழக நாயுடு பேரவை” ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு அறிவித்துள்ளார்.

கோவையில் நாயுடு பேரவையின் சார்பில் நாயுடு மற்றும் நாயக்கர் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவினரின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று (ஜனவரி மாதம் 3 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலை, G.N. மில்ஸ், அருகே அமைந்துள்ள கந்தவேல் மஹாலில் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் V. ஜெய்சங்கர் நாயுடு முன்னிலை வகித்து துவக்கவுரையாற்றிய போது :- தமிழக நாயுடு பேரவையானது கடந்த 2001 – ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். கோவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பேரவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்தந்த மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பு அமைந்து நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. இதில் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும் நமது அரசியலமைப்பு ஆரம்பிப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு அவர்கள் பங்கேற்று தமிழக நாயுடு பேரவை ஆலோசணை கூட்டத்தில் பேசிய போது :- வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய அமைப்பாக உள்ளதாகவும், தற்போது தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளதாக கூறிய அவர், ஜாதி வாரியாக செய்யும் ஒதுக்கீடை நிறுத்தி தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

விழாவை மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் T. சிந்துஜா, கோவை மண்டல மகளிர் அணி செயலாளர் D. கலைச்செல்வி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் N. பவித்ரா, N. உஷா மரகதம் மற்றும் V. பாலசரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கிவைத்தனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை தமிழக நாயுடு பேரவையின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநில செயலாளர், ஊன்றுக்கோல் J. கருணாகரன் நாயுடு வரவேற்றார். விழாவிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் S. நவநீத கிருஷ்ணன் நாயுடு தலைமை வகித்தார்.

மேலும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் S. பாலாஜி நாயுடு, மாநில பொருளாளர் T. சுரேஷ் நாயுடு மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் J. அரவிந்தபாபு நாயுடு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் படிக்க