March 15, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
2018 – 19 ம் ஆண்டிற்காக தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் பேசிய சபாநாயகர் தனபால்,
ஆயிரத்து 789 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு அவினாசி திட்ட அறிவிப்புக்கு 4 மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார். பின்னர், மாலை 3.30 மணிக்கு மீண்டும் பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
இன்று மாலை நடைபெறவுள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.