July 5, 2018
தண்டோரா குழு
டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது முரணாக உள்ளது.டிஜிபி நியமனத்தை ரத்து செய்து,புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி பதவி நீட்டிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.டி.ஜி.பி நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. டி.ஜி.பி பதவி நீடிப்பு காரணமாக பல காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பியாக பதவி உயர்வுகள் பெறாமலே ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த விவகாரத்தில் அரசு தான் செய்த தவறை உணர்ந்து டி.கே.ராஜேந்திரன் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் டி.ஜி.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரகாஷ் சிங் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.இதனை,அரசு வருங்காலங்களில் பின்பற்றும்.உச்சநீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்புகளை அடிப்படையாக கொண்டு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.