மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகந்தன் சர்வதேச பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் I.P.S. பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (04.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், I.P.S. தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் IPS.மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
மேலும்,மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இன்று ஆண்டு விளையாட்டு போட்டி (Annual Sports Meet) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரிநாராயணன், I.P.S தலைமையில் நடைபெற்றது. விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கியும், பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் கவிதாசன். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்