• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

March 29, 2023 தண்டோரா குழு

கட்டுமான துறையில் சமுதாயத்தை பாதிக்காத அளவு கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஆர்க்கிடெக்சர் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் லோகநாதன் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசினார்.

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மயிலேறி பாளையம் சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் ஐந்தாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி தலைவர் ராஜ்தீபன் சாமிநாதன் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஆர்.சாமிநாதன் வரவேற்று பேசினார்.

கல்லூரியில் ஆர்கிடெக்சர் பட்டப்படிப்பு முடித்த 55 மாணவ மாணவிகளுக்கு இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஆர்க்கிடெக்சர் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் லோகநாதன் பட்ட சான்றிதழ் வழங்கி பேசினார்.

ஆர்கிடெக்சர் கல்வி முடித்த மாணவர்கள் தற்போது மூன்று விதமான கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் படிப்பு வேலை பயிற்சி மருத்துவம் பொறியியல் படிப்பை விட தனித்தன்மை கொண்டது ஆர்கிடெக்சர் படிப்பு. உலகம் முழுவதும் ஈர்க்கக்கூடிய துறை நீங்கள் வேலை செய்வது யாருக்காக எதற்காக என்பதை புரிந்து சமுதாயத்திற்கு பாதிக்காத அளவு வேலைகளை நேர்த்தியாக செய்ய வேண்டும். இதில் நேரம் தவறாமை மிகவும் முக்கியது.
நீங்கள் செய்யும் வேலை, மதிப்பு வேலை கொடுப்பவருக்கு மதிப்பை கொடுக்க வேண்டும். உங்களுக்கு பெரு மதிப்பை கொடுக்க வேண்டும் 20% ஆவது உங்களது சொந்தத் திறனை கற்பனை திறனை பயன்படுத்தி கட்டுமான பணியில் ஈடுபட வேண்டும் வயதில் வருவாய் ஒரு பக்கம் இருந்தாலும் உலக அளவில் திறமையை நீங்கள் படிப்படியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் இன்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக சுஜாதா இங்கோ ரணி நியூ டெல்லி ஒஎஸ்எஸ் டிசைனிங் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி பேசும்போது,

ஆர்கிடெக்சர் படித்து முடித்த இளைஞர்கள் 10 விதமான கொள்கைகளை அடித்தளமாக கொண்டு செயல்பட வேண்டும்.
கற்பனைத் திறன் புரிந்து கொள்ளுதல் தீர்மானித்தல் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளிட்ட பத்து விதமான பின்பற்ற வேண்டும் ஆர்க்கிடெக்சர் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு உலகம் முழுவதும் சிறப்பான எதிர்காலமும் மரியாதையும் உள்ள துறை. இவற்றை நேசித்து செயல்பட இன்று பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று கூறினார்.

கல்லூரியில் துறை தலைவர் ரங்கநாதன் நிறைவில் நன்றி கூறினார்.

மேலும் படிக்க