• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுங்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

January 22, 2019 தண்டோரா குழு

இந்து முன்னனி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உரிய இழப்பீட்டை அக்கட்சியின் தலைவரிடமிருந்து பெற்றுத்தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக மனு அளித்தனர்.

கடந்த 22.09.2016 அன்று கோயமுத்தூர் துடியலூரில் இந்து முன்னணி இயக்க செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது இறுதி ஊர்வலம் காடேஸ்வர சுப்பிரமணியம், தசரதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் , அரசு பேருந்துகள், காவல் துறை வாகனங்கள், தனியார் கடைகள், என ஐந்து கோடி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இது சம்பந்தமாக மாநகரம் மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் சுமார் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்து முன்னனியைச்சார்ந்த 642 நபர்கள் கைது செய்யப்ட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சொத்து அழிப்பிற்கு காரணமான கட்சி, அதன் தலைமை மற்றும் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியவர்கள் மீது பொறுப்பு சுமத்தி, அவர்களிடமிருந்து சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் பணத்தை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் படிக்க