February 3, 2021
தண்டோரா குழு
பெங்களூருவில் இருந்து சசிகலா பிப்.7ல் தமிழகம் வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் தற்போது பெங்களூருவில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் இருந்து சசிகலா பிப்.7ல் தமிழகம் வருவதாக கூறியுள்ளார்.
மேலும், வரவேற்பு கொடுக்க தயாராக
இருங்கள் என ஆதரவாளர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.