March 6, 2020
தண்டோரா குழு
சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சி.ஏ.ஏ.வால் எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமையும் பறிக்க போவதில்லை. பல நாட்டினருக்கு நம் நாட்டின் பெயரை கெடுக்க ஆர்வம் உள்ளது. இந்துக்கள் ஒற்றுமையை கெடுக்க நாட்டின் பெயரை கெடுப்பதற்கே சிலர் சதி செய்து வருகின்றனர். நாட்டை விட்டு முஸ்லிம்கள் விரட்டிக்கப்படுவார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சரி செய்ய வேண்டும். ரஜினிகாந்த் இந்து மதத்திற்காக எப்படி சோ விழாவில் பேசினது போன்று எதிர்காலத்தில் பேசினால் ஒத்துழைப்பு கொடுப்பேன்.
பாஜக தனிமையாக நின்று ஜெயிக்க முடியும்; ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை. புதிய அகில இந்திய பாஜக தலைவருக்கு அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். தமிழக பாஜக தலைமைக்கு இப்போது அவசரம் இல்லை. தமிழகத்தில் பி.எப்.ஐ. பெரிதாக வளர்ந்துள்ளது, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை அதிமுக பாஜக இயக்குகிறது என்ற கேள்விக்கு – அதேபோன்று தெரியவில்லை என்றார்.
மேலும், ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்யலாம்; அச்சமுண்டாக்கி பொய் சொல்லி ஆர்பாட்டம் செய்யக்கூடாது. சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும், சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம். இந்திய- அமெரிக்கா நெருங்கக்கூடாது , நாம் நெருங்கினால் சீனாவிற்கு ஆபத்து; நெருங்கிய நண்பர் சீனா, அதை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் சினிமா தான் பார்ப்பார்கள், சட்டம் படிக்க மாட்டார்கள். கமல்ஹாசன் யார் அவர் ? கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.