• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன் – நாஞ்சில் சம்பத்

January 7, 2017 தண்டோரா குழு

“சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன்” என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா அளித்த இனோவா காரைக் கட்சி அலுவலகத்திற்குத் திருப்பி அளித்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாஞ்சில் சம்பத் தி.மு.க.வில் சேருவார் என்று பரவலாக வதந்தி நிலவியது.ஆனால், சனிக்கிழமை திடீரென்று அவர் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் வெளிவந்து தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத்,

“காரைத் திரும்ப அளித்தது குறித்து சசிகலா கேட்டார். பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்.

சசிகலா தலைமையில் சுதந்திரம் கிடைப்பதை உணர்கிறேன். அதனால், எனது முடிவையும் மாற்றிக் கொண்டேன். அதிமுகவில் உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தொய்வின்றி தொடர்ந்து உழைப்பேன்.

சசிகலா ஆணைகளை நிறைவேற்றுவதற்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன். கட்சியில் புதிதாக பொறுப்பு எதுவும் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க