October 22, 2020
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்துவந்த பரமேஸ்வரன் என்பவர் இரண்டு கண் பார்வையற்ற நபர் அவருக்கு வயது 75. இவரது சொந்த ஊர் சென்னை இவருடைய அண்ணன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு கோயம்புத்தூரில் வேலை செய்து ஜீவனம்சம் செய்ய வந்துள்ளார்.
பார்வையற்றோர் சங்க தலைவர் சதாசிவம் என்பவர் ஊதுபத்தி வியாபாரம் செய்யும் வேலையை ஏற்படுத்திக் கொடுத்து தனி அறை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து தொழில் ஏற்பாடு செய்து கொடுத்தார் கடந்த 15 ஆண்டுகளாக நல்லமுறையில் இருந்தார். இரண்டு தினங்களுக்கு முன் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். அவரது இறப்பை அவருடைய சகோதரர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
அவர் தாங்கள் பார்வையற்ற சங்கத்தின் மூலமாகவும் ஆத்மா அறக்கட்டளை மூலமாகவும் நல்லடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காவல்துறை உதவியுடன் இந்த பார்வையற்ற நபரை ஆத்மா அறக்கட்டளை வாகனத்தில் ஏற்றிச் சென்று மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பார்வையற்ற சங்கத்தின் தலைவர் சதாசிவம் தலைமையில் சுமார் 15 பார்வையற்ற நபர்கள் அவருடன் பழகிய நபர்கள் வந்தனர். அவர்கள் முன்னிலையில் பரமேஸ்வரனுக்கு ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இறுதிச் சடங்குகள் செய்தார்.