சக்தி எக்ஸலன்ஸ் அகாடமி (SEA), மற்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT), கோயம்புத்தூர் ஆகியவை பிஐஎம் அகாடமி (பில்டிங் இன்ஃபர்மேஷன், மாடலிங் மற்றும் மேனேஜ்மென்ட்) யுனைடெட் கிங்டம்,(UK) மற்றும் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகம், நியூகேஸில், (UK) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்நிகழ்வானது மெய்நிகர்வாயிலாக நடந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. சங்கர்வானவராயர் மற்றும் பிஐஎம் அகாடமியின் இயக்குநர் டாக்டர் கிரஹாம்கெல்லி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பிஐஎம் கட்டுமானம், திட்ட மேலாண்மை, வசதி மேலாண்மை, கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் சொத்து மேலாண்மை அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ் உடன்படிக்கையின் அடிப்படையில், SEA-KCT ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, பட்டதாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களுக்கு பிஐஎம் பயிற்சித்திட்டங்களை வழங்க வழிவகுக்கும்.
KCT-SEA இன் இயக்குநர் டாக்டர். ஜோசப் விதாணிகல் மற்றும் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிமல்குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை பற்றி உரையாற்றினார்.பிஐஎம் அகாடமியின் திட்ட மேலாளர் ஆண்ட்ரூ ஜான்சன், கேசிடி மற்றும் கேசிஎல்ஏஎஸ் இன் முதல்வர்கள் , கேசிடி இன் நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மை மனிதவள அதிகாரி, துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியத்தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்