June 21, 2018
தண்டோரா குழு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
தேர்தல் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக கமல்ஹாசன் நேற்று டெல்லி சென்றார்.இதையடுத்து மாலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.தமிழக அரசியல் நிலவரம் பற்றி கமல்ஹாசனிடம் ஆலோசனை நடத்தியதாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.இச்சந்திப்புக்கு பிறகு பேசிய கமல்ஹாசன்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.