• Download mobile app
25 Dec 2025, ThursdayEdition - 3606
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

க்ரோமா , தனது ‘2025-ம் ஆண்டு- இறுதி வாடிக்கையாளர் போக்குகள்’ குறித்த அறிக்கை வெளியீடு

December 25, 2025 தண்டோரா குழு

டாடா குழுமத்தைச் சேர்ந்த மிகவும் நம்பிக்கைக்குரிய இந்தியாவின் முன்னணி ஆம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான க்ரோமா , தனது ‘2025-ம் ஆண்டு- இறுதி வாடிக்கையாளர் போக்குகள்’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இந்தியர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தரம் மேம்படுத்துவதில் எத்தகைய ஆர்வம் காட்டினார்கள் என்பதை இந்த அறிக்கை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் இப்போது பெரிய ப்ராண்டுகள், ப்ரீமியம் வசதிகளைக் கொண்ட தயாரிப்புகள், ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சாதனங்களை அதிகம் விரும்புவதை க்ரோமாவின் நாடு தழுவிய இணைய வர்த்தகம் மற்றும் நேரடி விற்பனை நிலையங்கள் மூலமான விற்பனைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

க்ரோமாவின் அறிக்கையின்படி, ஸ்மார்ட்ஃபோன் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றம் மக்களின் வாங்கும் திறன் சார்ந்தது. விற்பனையான புதிய ஃபோன்களில் மூன்றில் ஒன்று ரூ .20,000 முதல் ரூ.30,000 வரையிலான ப்ரீமியம் ரகத்தைச் சேர்ந்தவை. ஐந்தில் ஒரு ஃபோன் ‘பிளாக் ஷிப்’ அல்லது சூப்பர்-ஃப்ளாக் ஷிப் எனப்படும் ப்ராண்ட்களின் மிக உயரிய தயாரிப்பாக உள்ளது. குறிப்பாக ரூ.50,000 முதல் ரூ.58,000 வரையிலான விலைப்பிரிவில் விற்பனை 300% அதிகரித்துள்ளது.

இது மக்கள் தொழில்நுட்பத்தை தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதைக் காட்டுகிறது. கன்டென்ட் கிரியேட்டர்கள், கேமிங் மீதான ஆர்வம் மற்றும் சிறந்த கேமரா/ ஏஐ மீதான மோகம் ஆகியவை இந்தியாவில் நிகழும் இந்த டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் அம்சங்களாக இருக்கின்றன.

இன்பினிட்டி ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில்,

“இந்தியர்கள் தங்கள் வீடுகளையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஒரு தெளிவான மாற்றத்தை எங்களால் காண முடிகிறது. இன்றைய வாடிக்கையாளர் மிகுந்த நம்பிக்கையுடனும், தெளிவான தகவல்களுடனும் அன்றாட மதிப்பை வழங்கும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். பெரிய திரைகள், ஸ்மார்ட் சாதனங்கள், மின்சாரத்தைச் சேமிக்கும் குளிர் சாதனங்கள், ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், நீண்ட காலப் பயனையும் தரத்தையும் கருத்தில் கொண்டே முதலீடு செய்கிறார்கள்,” என்றார்.

மேலும் படிக்க