• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் உரிமை கழகத்தின் பொதுச்செயலாளர் பி.வி.ராமானுஜம் உடல் தானம்

May 29, 2018 தண்டோரா குழு

மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அங்கமாக திகழ்ந்த பி.வி.ராமானுஜம் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியின் அங்கமாக திகழ்ந்த பி.வி.ராமானுஜம் நேற்று உயிரிழந்தார். முன்னாள் இராணுவ வீரரான இவர் மக்கள் உரிமை கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர். மேலும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஈழ தமிழர்கள் வெளியேற்றாதே என முழக்கமிட்டு இயக்கம் நடத்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

இந்நிலையில் வயது முதுமை காரணமாக உயிரிழந்த இவரது உடலை இறப்பதற்கு முன் உடலை தானம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் உயிரிழந்த இராமானுஜத்தின் உடலை புரட்சிகர மாணவர் முன்ணனியினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.

மேலும் படிக்க